மேலும் செய்திகள்
13 வருடங்களாக பதவி உயர்வின்றி வாடும் ஊழியர்கள்!
23-Sep-2025
மதுரை : தமிழக அரசின் வருவாய்த் துறையில் பயன்படுத்தப்படும் 'பசலி' என்பது அரேபிய சொல். இதன் பொருள் 'அறுவடை'. பசலி ஆண்டு என்பது அறுவடை சார்ந்த நாட்காட்டி முறை. இந்த ஆண்டு முறையானது ஜூலை 1ல் துவங்கி, ஜூன் 30ல் முடிவடையும். ஆங்கில நாட்காட்டியில் இருந்து 590 ஐ கழித்தால் வருவாய்த் துறையின் பசலி ஆண்டு கிடைக்கும். இது முகலாய ஆட்சி காலத்தில் அறிமுகமாகி, ஆங்கிலேயர் ஆட்சியிலும் தொடர்ந்து இன்றுவரை தொடர்கிறது. நிலவரி வருவாய் வசூலுக்கு பயன்படுத்தப்படுகிறது. வருவாய்த்துறையின் பல்வேறு பணிகளில் நிலவருவாய் நிர்வாகம், கிராம கணக்கு பதிவேடுகளில் தரவுகள், கிராம கணக்குகளை சரிபார்க்கும் நிகழ்வான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) மற்றும் வருடாந்திர பயிராய்வு அறிக்கையான ஜி ரிட்டர்ன் அறிக்கை போன்றவற்றில் பசலி ஆண்டு பின்பற்றப்படுகிறது.வருவாய், பேரிடர் மேலாண்மை துறை மிகவும் தொன்மையான துறை. அரசு நிர்வாகத்தின் தேவை விரிவடைந்ததால், இத்துறையில் இருந்து பல்வேறு துறைகள் படிப்படியாக விரிவடைந்துள்ளது. இத்துறையின் இன்றியமையாத சேவையை சார்ந்தே பிறதுறைகள் இயங்குவதால், வருவாய்த் துறை பிறதுறைகளுக்கு 'தாய் துறை' என அழைக்கப்படுகிறது. இத்துறையின் சேவையை அங்கீகரிக்க வேண்டும் என வருவாய்த்துறையின் பல்வேறு சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்தன. இதையடுத்து ஜூலை 1 ஐ வருவாய்த்துறை தினமாக அறிவித்து அக். 6 ல் அரசு ஆணைப் பிறப்பித்துள்ளது.
23-Sep-2025