உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அரசு கள்ளர் பள்ளி ஆண்டு விழா

அரசு கள்ளர் பள்ளி ஆண்டு விழா

உசிலம்பட்டி : உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டியில் அரசு கள்ளர் பள்ளியின் 90வது ஆண்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் சுமதி தலைமை வகித்தார்.மேற்பார்வையாளர் முத்துக்காமன், விடுதி காப்பாளர் ஜெயபால், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் பானுமதி, சின்னத்தாய், சத்தியவதி, காந்தி, குணவதி, பிரேமாசுகந்தி, செல்வி, முன்னாள் மாணவர்களான பேராசிரியர் பால்பாண்டியன், நீதிபதி நிவாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.அதிக மதிப்பெண் பெற்றமாணவர்களுக்குபரிசு வழங்கினர். ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்தனர். 100 வது ஆண்டுக்குள் விளையாட்டு மைதானம், நுாலகம், போட்டித் தேர்வு எழுத பயிற்சி மையம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்தனர். முன்னாள் மாணவர் மாயச்செல்வம் தொகுத்து வழங்கினார். பொறியாளர் பிரபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி