உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்க அரசு எதிர்ப்பு

மதுரை மேயரின் கணவருக்கு ஜாமின் வழங்க அரசு எதிர்ப்பு

மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பான வழக்கில் கைதான மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரனின் ஜாமின் மனு மீதான விசாரணையை மாவட்ட நீதிமன்றம் ஒத்திவைத்தது. இவ்வழக்கில் 17 பேர் கைதாகினர். இவர்களில் ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் புரோக்கர்கள் உட்பட 7 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்கனவே நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. மதுரை மேயரின் கணவர் பொன்வசந்த் மற்றும் பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஜாமின் அனுமதிக்கக் கோரி மதுரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி சிவகடாட்சம் விசாரித்தார். ரூ.10 லட்சம் வரை பெற்றார் அரசு மாவட்ட தலைமை குற்றவியல் வழக்கறிஞர் பழனிச்சாமி வாதிட்டதாவது: ரவிச்சந்திரன் தனக்கு கீழ் தனிப்பட்ட முறையில் ஒருவரை பணியில் ஈடுபடுத்தினார். அவர் மூலம் கணினி பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி 33 சொத்து வரி கணக்குகளில் திருத்தம் செய்துள்ளார். பொன்வசந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வணிக கட்டடங்களுக்கு வரியை குறைத்து நிர்ணயிக்க ஏற்பாடு செய்துள்ளார். காளவாசல் பகுதியிலுள்ள ஒரு வணிக வளாகத்திற்கு வரி குறைப்பு செய்ததற்காக ரூ.10 லட்சம் வரை பெற்றுள்ளார். இருவருக்கும் ஜாமின் அனுமதிக்கக்கூடாது. இவ்வாறு ஆட்சேபம் தெரிவித்தார். நீதிபதி ரவிச்சந்திரன் மனு மீதான விசாரணையை செப்.,9, பொன்வசந்த் மனு மீதான விசாரணையை செப்.10க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ