உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாநில போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்

மாநில போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்

சோழவந்தான்: சோழவந்தான் அருகே அய்யப்ப நாயக்கன்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில எறிபந்து போட்டிக்குத் தேர்வாகியுள்ளனர். பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2025--26ம் ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. 14 குறுவட்டங்களில் நடந்த போட்டிகளில் வென்றவர்கள் மாவட்டப் போட்டிகளுக்கு தேர்வு பெற்றனர். நாகமலை ஜெயராஜ் நாடார் அன்னபாக்கியம் மெட்ரிக் பள்ளியில் நடந்த மாவட்ட போட்டியில் 17,14 வயதிற்கு உட்பட்டோருக்கான பிரிவில் அய்யப்பநாயக்கன்பட்டி பள்ளி மாணவியர் வென்று மாநில போட்டிக்கு தேர்வாகினர். இதையடுத்து திருச்சி, ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடக்கும் மாநிலப் போட்டிகளில் வெற்றி பெற தலைமையாசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர் மாயக்கண்ணன், ஆசிரியர்கள் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை