மேலும் செய்திகள்
அஸ்திவாரம் பலவீனமான 4 மாடி கட்டடம் சாய்ந்தது
28-Jul-2025
அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் ஒன்றியம் வாவிடமருதுார் ஊராட்சியில் பழமையான பள்ளி கட்டடத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளி 1 முதல் 5ம் வகுப்பு வரை இரு வகுப்பறை கட்டடத்திலும், 6 முதல் 8 வரை அலங்காநல்லுார் மெயின் ரோட்டில் உள்ள வகுப்பறை கட்டடத்திலும் இயங்குகிறது. 1969ல் கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் 5 வரை வகுப்புகள் நடக்கின்றன. இக்கட்டடத்தின் ஓடுகள் பராமரிக்கப்பட்டு இருந்தாலும் சில இடங்களில் மழைநீர் கசிகிறது. கட்டடத்துடன் சேர்ந்திருந்த சமையலறை சில ஆண்டுகளுக்கு முன் இடிந்தது. இதன் அருகே புதிய சமையலறை கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. பள்ளி நிர்வாகம் சார்பில் புதிய வகுப்பறை கட்டடம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப மாணவர்கள் எண்ணிக்கை இல்லாததால் நிர்வாகம் தாமதம் செய்து வருவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
28-Jul-2025