உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எம்.எல்.ஏ., அலுவலக கட்டிடத்திற்கு பூமிபூஜை

எம்.எல்.ஏ., அலுவலக கட்டிடத்திற்கு பூமிபூஜை

உசிலம்பட்டி: உசிலம்பட்டி தினசரி சந்தை திடலுக்குள் எம்.எல்.ஏ., அலுவலக கட்டடம் இருந்தது. போதிய பராமரிப்பின்றி கூரை பூச்சுகள் உதிர்ந்து விழுந்தன. மரங்களும் முளைத்து வேர்கள் பரவி பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்தது.இதனை புதுப்பித்து தரவேண்டும் என எம்.எல்.ஏ., அய்யப்பன் சட்டசபையில் கோரிக்கை விடுத்திருந்தார். புதிய கட்டடம் கட்டுவதற்காக அரசு ரூ. 49 லட்சம், எம்.எல்.ஏ., நிதியில் இருந்து ரூ.21 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டடம் கட்ட அனுமதி வழங்கியிருந்தது. இதற்கான பூமிபூஜை நேற்று நடந்தது. எம்.எல்.ஏ., அய்யப்பன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பிரியா, உதவி பொறியாளர் ராஜ்பிரதாப் மற்றும் அ.தி.மு.க., பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ