நிலக்கடலை விலை சரிவு
பேரையூர் : பேரையூர் பகுதியில் சாகுபடி பரப்பளவு அதிகரித்து, விளைச்சலும் அதிகரித்துள்ளதால் நிலக்கடலை விலை சரிந்துள்ளது. கடந்தாண்டு அக்டோபர் முதல் மழை பெய்ய துவங்கியதால் நிலக்கடலை சாகுபடி விறுவிறுப்பாக நடந்தது. தற்போது அறுவடை துவங்கிய நிலையில் இப்பகுதிகளில் நிலக்கடலை விற்பனை ஜோராக நடக்கிறது. ஒரு படி ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையாகிறது. கடந்தாண்டு வரத்து குறைவால் ஒரு படி ரூ.50 வரை விற்றது. இந்தாண்டு வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர்.