குருபூஜை
பேரையூர்: கூலப்புரம் சுந்தரமூர்த்தி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் குருபூஜை விழா மற்றும் அன்னதானம் நடப்பது வழக்கம். 563 ஆம் ஆண்டு குரு பூஜை விழா நேற்று நடந்தது. மூலவர் சுந்தரமூர்த்தி சுவாமிக்கு பால், தயிர், சந்தனம் மற்றும் பன்னீரால் அபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளும் மகா தீபாராதனையும் நடந்தன. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விளாத்திகுளம் ரெட்டி ஜன சங்கத்தினர் செய்திருந்தனர்.