ஜிம்னாஸ்டிக் போட்டி
மதுரை : மதுரை காமராஜ் பல்கலை ஆடவர் கல்லுாரிகளுக்கு ஜிம்னாஸ்டிக் போட்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. உடற்கல்வி துறை இயக்குநர் ரமேஷ், அமைப்பாளர் முத்துக்குமார் துவக்கி வைத்தனர். அமெரிக்கன் கல்லுாரி மாணவர் ரோஹித் முதலிடம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லுாரி மாணவர் முத்துக்குமார் இரண்டாமிடம், ராஜபாளையம் ராஜூக்கள் கல்லுாரி மாணவர் குணாள் மூன்றாமிடம் பெற்றனர்.