உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / அறுபதுக்கு பின்பு ஆனந்த வாழ்வு

அறுபதுக்கு பின்பு ஆனந்த வாழ்வு

மனிதனை பாதிக்கும் நோய்களுக்கு காரணம் மனஅழுத்தமே. அதன் விளைவே ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய், சுரப்பிகள் பாதித்து உடல் பருமன் என பல தொந்தரவுகள். ''என்னிடம் வரும் முக்கால்வாசி நோயாளிகள் கை வலி, மூட்டுவலி, தலைவலி என்கின்றனர். பரிசோதனையில் எதுவுமே இருக்காது. மனஅழுத்தத்தால்தான் அப்படி புலம்புகின்றனர். அவர்கள் அமைதி சூழலில் இருந்தால் எந்தப் பாதிப்பும் வராது'' என்கிறார் மதுரையை சேர்ந்த டாக்டர் வி.நாராயணசாமி.மதுரை நத்தம் ரோட்டில் கடவூர் அருகே சிவானந்த தபோவன ஆசிரமம், அதோடு இணைந்த இலவச மருத்துவமனையை நடத்தி வருகிறார். மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சை, மருந்துகள் எல்லாமே இங்கு இலவசம். தங்கி சிகிச்சை பெறும் அளவுக்கு தரம், அமைதி, துாய்மையுடன் உள்ளது.இதனருகே வயதான காலத்தில் மன, உடல் ரீதியாக பாதிப்போருக்கு அமைதி வாழ்வளிக்கும் ஆனந்தம் முதியோர் இல்லம், மருந்தில்லா மருத்துவம் என்ற நாராயணா இயற்கை வைத்திய மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இங்கு பராமரிப்பு கட்டணம் உண்டு.வயது அறுபதை தாண்டுவோர் குடும்பம், பணிச் சூழலால் மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, அமைதி இல்லங்களை தேடுகின்றனர். அவர்களுக்கானது ஆனந்தம் முதியோர் இயற்கை நல மையம். கடவூர் அருகே அழகர்மலை, கிழுவமலை, கரந்தமலைகள் சூழ, பறவைகளின் சலசலப்புக்கு இடையே, இயற்கை அன்னை மடியில் அமைந்துள்ளது.ஓய்வு காலத்தில் பரபரப்பு, பதற்றத்தில் இருந்து விடுபட்டு மனஅமைதியுடன் இங்கு காலங்கழிக்கலாம். ஆன்மிகம், பொழுதுபோக்கு, உடற்பயிற்சி, தியானம், யோகா, மசாஜ் என எல்லாமே உண்டு. ஸ்டார் ஓட்டல் அறை வசதியுடன் தங்கலாம். உடற்பயிற்சி கருவிகள், ஆலமர நிழலில் அற்புத தியானம், 24 மணி நேரமும் ெஹல்த்கேர் என கவனிக்கின்றனர். ஆனந்த உணர்வை வழங்குவதால், வயதான பலர் குடும்பத்தையே மறந்துவிடுகின்றனராம்.இயற்கை மருத்துவமனையில் மண்குளியல், நீராவி குளியல், வாழை இலை குளியல், மசாஜ் தெரபி, யோகா, அக்குபங்சர் என பலவகை இயற்கை வைத்தியமும் உள்ளது. பழங்கள், காய்கறிகள், சிறுதானியங்கள், பருப்பு வகைகளில் பிரத்யேக உணவு வழங்கி ஆரோக்கியத்தை பேணுகின்றனர். மூன்று நாள் தங்கி இருந்து சிகிச்சை பெறலாம். இதன்மூலம் சர்க்கரை, ரத்தஅழுத்த நோய்கள், உடல் எடைஅதிகரிப்பு, மலச்சிக்கல், கை, கால் வலி, மாதவிடாய் கோளாறுகளை சரிசெய்ய முடியும். உடனடி தீர்வுக்கு அலோபதி சிகிச்சை என்றால், பெரிய நோய்கள் வராமல் தடுக்க இம்முறை வைத்தியத்தால் மன அழுத்தத்தை சரிப்படுத்துகின்றனர். உடலுக்குள் நச்சு நீரை அகற்றி புத்துணர்ச்சி அளித்து மனத்தையும், உடலையும் இளமையாக உணர வைக்கின்றனர்.தொடர்புக்கு: 93451 52901


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி