சுகாதார விழிப்புணர்வு
மதுரை : மதுரை வேளாண் கல்லுாரி விவசாயத்துறை இறுதியாண்டு மாணவிகள் சினேகா, சத்தியா, சிவானி, ஷர்மிளா, சாஸ்மிதா, சிரிச்சந்தனா, எஸ்.சத்தியா, ஷேரன் ரோஸ், சிவ பிரித்தி ஆகியோர் கிராமப்புற அனுபவ திட்டத்தின் கீழ் தேனியில் முகாமிட்டனர்.சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி உப்பார்ப்பட்டி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடன் விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர். குப்பையை அகற்றுவது, மின்கழிவு, கண்ணாடி கழிவுகளின் பயன்பாடு, மறுசுழற்சி செய்வது குறித்து மாணவர்களுக்கு விளக்கினர். சுத்தமான சுற்றுச்சூழலை உணர்த்தும் வகையில் மவுனமொழி நாடகத்தை நடத்தினர்.துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு வழங்கினர்.