உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்களைமருந்துடன் தேர்வறைக்குள் அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சர்க்கரை நோய் பாதிப்பு மாணவர்களைமருந்துடன் தேர்வறைக்குள் அனுமதிக்க வழக்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை : சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்களை மருந்துகள், உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் தேர்வறைக்குள் அனுமதிக்க தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.மதுரை கேசவன் தாக்கல் செய்த பொதுநல மனு:முதல்வகை சர்க்கரை நோய் (டைப் 1) குழந்தை பருவத்தில் வருகிறது. இரண்டாம் வகை சர்க்கரை நோய் (டைப் 2) வயதானவர்களுக்கு வருகிறது. முதல்வகை சர்க்கரை நோயாளிகளுக்கு தொடர் கண்காணிப்பு, மருத்துவ உதவிகள் தேவை. இப்பாதிப்புள்ள மாணவர்களை மருந்து, பழங்கள், சாக்லேட், குடிநீரை தேர்வறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்க மத்திய இடைநிலை கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ,) தேர்வு கட்டுப்பாட்டாளர் 2017 பிப்.,21ல் சுற்றறிக்கை அனுப்பினார். ஆனால் பள்ளி பொதுத் தேர்வுகள், யு.பி.எஸ்.சி., -நீட்- ஜெ.இ.இ., உட்பட பல்வேறு போட்டித் தேர்வுகள் எழுதச் செல்லும்போது அவர்களுக்குரிய உணவு, மருந்துகளை தேர்வறைகளுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை. இடையில் இயற்கை உபாதை (சிறுநீர்) கழிக்க அனுமதிப்பதில்லை. அவர்களுக்குரிய உரிமை மறுக்கப்படுகிறது.முதல்வகை சர்க்கரை நோய் பாதிப்புள்ள மாணவர்களை மருந்துகள், உணவுப் பொருட்கள், மருத்துவ உபகரணங்களுடன் தேர்வறைக்குள் அனுமதிக்க வேண்டும். இடையில் இயற்கை உபாதை போக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் சுற்றறிக்கை வெளியிட உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: இவ்விவகாரத்கை கையாள்வது குறித்து தேர்வறை கண்காணிப்பாளர்கள் முடிவெடுப்பர். மனுதாரர் கோரும் நிவாரணத்தை நீதிமன்றம் உத்தரவாக பிறப்பிக்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை