உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜவுளி தொழிலாளர்கள் நலக்குழு அமைக்ககோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் தள்ளுபடி

ஜவுளி தொழிலாளர்கள் நலக்குழு அமைக்ககோரிய வழக்கு தள்ளுபடி * உயர்நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை: ஜவுளி ஆலை தொழிலாளர்களின் நிலைமையை கண்காணிக்க சிறப்புக்குழு அமைக்க தாக்கலான வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.தமிழ்நாடு பஞ்சாலை மற்றும் பொதுத்தொழிலாளர் சங்க மாநில பொதுச் செயலாளர் திவ்யாராகினி தாக்கல் செய்த மனு:தமிழகத்தில் பல்வேறு ஜவுளி ஆலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் நிலைமைகள், பிற தொடர்புடைய பிரச்னைகளை கண்காணிக்க வேண்டும். இதற்கு அனைத்து மாவட்டங்களிலும் சிறப்புக் குழுவை அமைக்க தலைமைச் செயலர், டி.ஜி.பி., தொழிலாளர் துறை கமிஷனர், சமூக நலத்துறை இயக்குனர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரித்தது.அரசு பிளீடர் திலக்குமார், அரசு வழக்கறிஞர் ரவி ஆஜராகினர்.நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தவறாக புரிந்து கொண்டு மனுவில் நிவாரணம் கோரப்பட்டுள்ளது. சிறப்புக் குழுக்களை அமைப்பது தேவையின் அடிப்படையில் அதிகாரிகளால் மேற்கொள்ள வேண்டிய முடிவு. மனுதாரர் கோரும் நிவாரணம் நீதித்துறையின் மறு ஆய்வு எல்லைக்கு அப்பாற்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை