உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வனத்தை பாதுகாக்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

வனத்தை பாதுகாக்க நடவடிக்கை உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை, : தமிழகத்தில் வனப்பகுதிகளை பாதுகாப்பதை உறுதி செய்ய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மேலுார் வழக்கறிஞர் ஸ்டாலின் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. வன உயிரினங்கள், வனவளத்திற்கு பாதிப்பு ஏற்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அச்சத்தில் வன விலங்குகள் வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன.வனத்தில் தீ வைப்பவர்கள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டு வனத்தை அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனத்துறையில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். வனத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: சட்டம், விதிகளை பின்பற்றி வனப்பகுதிகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை