உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயில் கட்டளை சொத்து விற்பனை ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் கட்டளை சொத்து விற்பனை ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை : புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலுள்ள கட்டளை நிலத்தை அபகரித்து விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.காரைக்குடி நேமத்தான்பட்டி சுப்ரமணியன் செட்டியார் தாக்கல் செய்த மனு:எங்களது முன்னோர் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பகுதியிலுள்ள சில கிராமங்களில் 18ம் நுாற்றாண்டில் குறிப்பிட்ட பகுதி நிலத்தை விலைக்கு வாங்கினர். அதிலிருந்து வரும் குத்தகை தொகை மூலம் ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோயிலில் சிறுகால சந்தி கட்டளை ஏற்படுத்தி அன்னதானம், இறைப்பணியில் ஈடுபட்டனர். அச்சொத்தின் ஒரு பகுதியில் விவசாயம் செய்த சிதம்பரம் என்பவர் குறிப்பிட்ட பகுதியை கிரையமாக தருமாறு கேட்டார். கட்டளைதாரர்கள் மறுத்தனர்.சிதம்பரம்,'தான் சொத்தின் பரம்பரை அறங்காவலர். சொத்துக்களை விற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும்,' என புதுக்கோட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்நீதிமன்றம்,' கட்டளைக்கு ரூ.10 லட்சம் டிபாசிட் செய்ய வேண்டும். சொத்துக்களை விற்பனை செய்யலாம்,' என உத்தரவிட்டது. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி எஸ். ஸ்ரீமதி: புதுக்கோட்டை நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சட்டவிரோதமாக நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது. சந்தி கட்டளையின் அறங்காவலர் என சிதம்பரம் கூறியது தவறானது. விற்பனை பத்திர ஆவணம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை