உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வண்டியூர் கண்மாய் பூங்காவில் மேம்பாட்டுப் பணியை தொடரலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு

வண்டியூர் கண்மாய் பூங்காவில் மேம்பாட்டுப் பணியை தொடரலாம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மதுரை வண்டியூர் கண்மாய்க்கரை சுந்தரம் பூங்காவில் கடைகள் கட்டுமானத்தைத் தவிர பிற மேம்பாட்டுப் பணியை தொடரலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை பொழிலன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை கே.கே.நகர் வண்டியூர் கண்மாய்க்கரையில் சுந்தரம் பூங்கா உள்ளது. கண்மாயை அழகுபடுத்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை ரூ.50 கோடி ஒதுக்கியது.தற்போது பூங்காவில் வணிக நோக்கில் 40 உணவு அரங்குகளுக்கான கட்டுமான பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்கிறது. உணவு அரங்குகளை பயன்படுத்துவோர் உணவு, பிளாஸ்டிக் பாட்டில் கழிவுகளை விட்டுச்செல்வர். கண்மாய் மாசுபடும்.உணவு அரங்குகளுக்கான கட்டுமானப் பணிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.ஜூலை 31 ல் இரு நீதிபதிகள் அமர்வு, கட்டுமான பணிக்கு இடைக்காலத் தடை விதித்தது.தடையை நீக்கக்கோரி மாநகராட்சி கமிஷனர் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு நேற்று விசாரித்தது.மாநகராட்சி தரப்பு: கட்டுமானப் பணிக்கு தடையில்லாச் சான்று கோரி விண்ணப்பித்தது தமிழக அரசிடம் நிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.நீதிபதிகள்: இடைக்காலத் தடை உத்தரவு மாற்றியமைக்கப்படுகிறது. வணிக ரீதியாக கட்டப்படும் 14 கடைகளைத் தவிர பூங்காவின் மற்ற மேம்பாட்டுப் பணியை தொடரலாம் என ஏற்கனவே இந்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு டிச.13 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை