உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சாத்தான்குளம் கொலை வழக்கு கால நீட்டிப்பு கோருவது ஏன் உயர்நீதிமன்றம் கேள்வி

சாத்தான்குளம் கொலை வழக்கு கால நீட்டிப்பு கோருவது ஏன் உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் கோருவது ஏன் என கேள்வி எழுப்பியது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. வியாபாரி ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸை போலீசார் 2020 ஜூன் 19 ல் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். இருவரும் கிளைச் சிறையில் இறந்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உட்பட 9 போலீசார் மீது சி.பி.ஐ.,கொலை வழக்கு பதிந்தது. மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடக்கிறது. அந்நீதிமன்றம் விசாரணையை முடிக்க பலமுறை உயர்நீதிமன்றம் கால நீட்டிப்பு வழங்கியது. மேலும் 6 மாதங்கள் கால நீட்டிப்பு கோரி அந்நீதிமன்றம் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது. நீதிபதி கே.முரளிசங்கர், 'மேலும் கால அவகாசம் கோருவது ஏன். கீழமை நீதிமன்றம் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ