உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வைகையை காப்பாற்ற களம் இறங்கிய உயர்நீதிமன்றம்; 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ்

வைகையை காப்பாற்ற களம் இறங்கிய உயர்நீதிமன்றம்; 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ்

மதுரை: வைகை ஆற்றை மாசுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் தானாக முன்வந்து பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளர் (நீதித்துறை) தாக்கல் செய்த பொதுநல மனு:வைகை ஆற்று நீர் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்கள் பயனடைகின்றன. இவற்றில் வைகை பயணிக்கும் 260 கி.மீ., துாரத்தில் 177 இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் கலக்கின்றன. கழிவு நீரை சுத்திகரித்து வெளியேற்ற வேண்டும். அதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்காமல் கழிவு நீரை வெளியேற்றுவதால் வைகை ஆறு மாசடைந்துள்ளது. இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வைகை பயனற்றுப் போகும். மாசுபடுவதை தடுக்க வேண்டும். மாசுபடுத்துவோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.இதை தானாக முன்வந்து விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அமர்வு: மதுரை உட்பட 5 மாவட்ட கலெக்டர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதுபோல் மற்றொருவர் தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து டிச.16 ல் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

V Gopalan
டிச 14, 2024 16:53

Let the Justices of High Court Madurai constitute a committee, start with Peranai Anaippatti to Madurai as to how much encroachment is made in the Vaigai River besides leaving drainage water et all. Once upon a time say about 60 years back, between Sholavandan - Mullippallam the river bed was being used for Kabaddi match and also evening time enjoyed like a Beach. During Chithrai, vaigai river was used to celebrate Poopallakku and TP Chokkalal Ramseit beedi company used to arrange some events etc. These are all now remain as a dream. Now, the entire river is full of bushes, public toilet and half of the river is encroached making into the river as a small canal. Hence, Justices should direct the concerned Collectors or any one is responsible to remove all bushes, encroachments, drainage water should not be left in the river etc. The river should get