குன்றத்து தீபத்துாணில் மகாதீபம் ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
திருப்பரங்குன்றம்: ஹிந்து மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் சோலைகண்ணன் தெரிவித்துள்ளதாவது: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலைமீதுள்ள தீபத்துாணில் பாண்டிய மன்னர் காலத்திலிருந்து தொன்று தொட்டு கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டு வந்துள்ளது. இடைக்காலத்தில் நிறுத்தப்பட்டு, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி மீண்டும் தீபத்துாணில் தீபம் ஏற்றாமல், இறந்தவர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இது உயர்நீதிமன்ற தீர்ப்பையும், முருகப்பெருமானையும் அவமதிக்கும் செயல். எனவே உயர்நீதிமன்ற உத்தரவுபடி இந்தாண்டு டிச. 3ல் திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் மீண்டும் கார்த்திகை மகாதீபம் ஏற்ற வேண்டும். தலவிருட்சமான கல்லத்தி மரத்தையும் வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.