உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்

மதுரை: 'மதுரை சித்திரை திருவிழாவில் புதிய நடைமுறையைக் கொண்டு வருவது பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்' ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கத் துணைத் தலைவர் சுந்தர வடிவேல் கூறியிருப்பதாவது: அரசு சார்பில் திருவிழா ஏற்பாடுகள் குறித்து பல கூட்டங்கள் நடந்தாலும் அனைத்தும் நடைமுறைக்கு வருவதில்லை. மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்காக மே 8 ல் காலை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். இந்நிகழ்வில் பங்கேற்க பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.பல்லாயிரம் பக்தர்கள் தினமும் மாசி வீதிகளில் அம்மனை தரிசிக்க காத்திருப்பர். அவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை, மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். கூட்ட நெரிசலால் ஏற்படும் விபத்துகளை தடுக்க போலீஸ் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.திருவிழாவுக்காக இலவச 'ஹெல்ப் லைன்' அறிமுகம் செய்து குழந்தைகள், பெண்களை பாதுகாக்க வேண்டும். கள்ளழகர் எழுந்தருளும் மண்டகப் படிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது. ஒற்றுமை, பக்தியுடன் பங்கேற்கும் பக்தர்களை பாதுகாப்பது அரசின் கடமை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை