உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஹாபி கிளப் நிகழ்ச்சி

ஹாபி கிளப் நிகழ்ச்சி

மதுரை: மதுரை கோமதிபுரம் சென்ஸ் சுற்றுச்சூழல் தொண்டு நிறுவன மையத்தில் 'ஹாபி கிளப்'நிகழ்ச்சி கிளப் நிறுவனர் பதி தலைமையில் நடந்தது.சென்ஸ் செயலாளர் கணேசன் வரவேற்றார். மாரியப்பன், சாருலதா, பெருமாள் உட்பட பலர் மன அழுத்தம், அதை போக்கும் வழிமுறைகள் குறித்து தெரிவித்தனர். நலிந்தோருக்கான மருத்துவ உதவி 5 பேருக்கு, பள்ளி மாணவர்கள் 15 பேருக்கு கல்வி உதவித்தொகையை அபயம் டிரஸ்ட் நிறுவனர் இந்திராபதி வழங்கினர். தவக்கிருஷ்ணன் நன்றி கூறினார். கோமதிபுரம் குடியிருப்பு தலைவர் ராகவன், செயலாளர் கணேசன், சேபாராணி, அலமேலு, இசக்கி, வீரசிங்கம், புனிதா, ஸ்ரீநாக்ஸ் என்விரோ பிரைவேட் நிறுவனத்தின் பணியாளர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை