உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / போர்களில் பங்கேற்ற ராணுவத்தினர் கவுரவிப்பு

போர்களில் பங்கேற்ற ராணுவத்தினர் கவுரவிப்பு

மதுரை: எழுமலையில் ஒருங்கிணைந்த பட்டாள அமைப்பு மண்டலம் 6, 7, 8 ஆகியவை சார்பில் இந்திய ராணுவத்தில் 1965, 71 ம் ஆண்டுகளில் நடந்த போர்களில் பணியாற்றிய வீரர்கள், வீராங்கனைகளை கவுரவிக்கும் விழா நடந்தது.மாநில துணைத் தலைவர் வெள்ளியங்கிரி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் தில்லை நடராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் ராணுவ அதிகாரிகள் விஸ்வநாதபிரபு, ராசையா ஆகியோர் பேசினர்.மண்டல தலைவர் வீராச்சாமி தொகுத்து வழங்கினார். போரில் பங்கேற்ற மதுரை, தேனி, விருதுநகர் மாவட்ட முன்னாள் ராணுவத்தினர் 25 பேர் கவுரவிக்கப்பட்டனர். கடந்த மாதம் அசாம் மாநிலத்தில் விபத்தில் இறந்த ராணுவ வீரர் இன்பராஜா குடும்பத்தினருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. துணைச் செயலாளர் கண்ணன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி