பாலமேடு மஞ்சமலை அய்யனார் சுவாமி கோயில் குதிரை எடுப்பு விழா
பாலமேடு: பாலமேடு அருகே வலையபட்டி ஜமீன்தார்கள் கிராம மஞ்சமலை அய்யனார் சுவாமி குதிரை எடுப்பு விழா 8 ஆண்டுகளுக்கு பின் நடந்தது.மே 25ல் பூந்தமலை கொண்ட அய்யனார் சுவாமிக்கு பூணூல் சாற்றுதல் விழா நடந்தது நேர்த்திக்கடனாக குதிரை, காளை, பசுக்கள், திருபாதம், திருமண தம்பதிகள், குழந்தைகள் கோழி உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகள் எடுத்து வந்தனர். முன்னதாக இந்த சிலைகள் அரசம்பட்டி மந்தையில் வேட்டி, துண்டு, வண்ண மாலைகளால் அலங்கரித்து வைத்திருந்தனர்.பின் மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசுவாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உப தெய்வங்களின் சிலைகளுடன், வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க ஊர்வலமாக வலையபட்டி மந்தை திடலுக்கு எடுத்து வந்து வைத்தனர்.பின் சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள், தீபாதாரனை நடந்தது. பரிவாரங்களுடன் சுவாமி குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த கோயில்களுக்கும், நேர்த்திக்கடன், பொம்மைகள், சுவாமி சிலைகள் 5 கி.மீ., தொலைவில் உள்ள மஞ்சமலை சுவாமி கோயிலுக்கும் எடுத்து செல்லப்பட்டன. ஏற்பாடுகளை வலையபட்டி அரண்மனை ஜமீன்தார்கள், அரசம்பட்டி, சல்லிக்கோடாங்கிபட்டி, புதுார், லக்கம்பட்டி கிராம மக்கள் செய்தனர்.