உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மழையால் வீடு சேதம்

மழையால் வீடு சேதம்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி நக்கலப்பட்டி ஊராட்சி மாதரையில் 25 ஆண்டுகளுக்கு முன்பு காலனி வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 2019ல், புதுப்பிக்கும் பணியும் நடந்துள்ளது. இருந்த போதும் 20க்கும் மேற்பட்ட வீடுகள் பழுதடைந்த நிலையில் உள்ளன.இதில் ஒரு வீட்டில் ராமன் தனது மனைவி, மகன், மருமகள், பேத்திகள் இருவர் என 6 பேர் வசித்து வருகின்றனர். கோடையில் அடுத்தடுத்த மழையின் காரணமாக நேற்று காலை 6:00 மணியளவில் வீட்டின் கூரை இடிந்து விழுந்தது. குடும்பத்தினர் 6 பேரும் வீட்டின் முன்பகுதியில் உள்ள மரத்தடியில் அமர்ந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வீட்டுக்குள் இருந்த அவரது மகன் கிராமியக்கலைஞர் பால்பாண்டி வைத்திருந்த டிரம்செட்கள், வீட்டுச் சாமான்கள் சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ