உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பழநி கிரி வீதியை சுற்றிலும் அங்கீகாரமற்ற கட்டடங்கள் எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி

பழநி கிரி வீதியை சுற்றிலும் அங்கீகாரமற்ற கட்டடங்கள் எத்தனை? உயர்நீதிமன்றம் கேள்வி

மதுரை: பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில் மலையடிவாரத்தில் கிரி வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக, சென்னையை சேர்ந்த ராதாகிருஷ்ணன், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி ஆர்.விஜயகுமார் அமர்வு மீண்டும் விசாரித்தது.நீதிபதிகள், 'ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட பகுதிகளை கண்காணிப்புக் குழு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அங்கீகாரமற்ற கட்டுமானங்களின் எண்ணிக்கை, விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தக் கோரி வந்துள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை, அங்கீகாரமற்ற கட்டடங்களை பயன்படுத்துவோரில் எத்தனை பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளன என்ற விபரங்களை பழநி நகராட்சி கமிஷனர் செப்., 24ல் தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை