உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மனிதநேய வாரவிழா

 மனிதநேய வாரவிழா

மதுரை: மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனிதநேய வாரவிழா ஜன.24 முதல் 30 வரை கொண்டாடப்பட்டது. நிறைவு விழாவில் கலெக்டர் பிரவீன் குமார் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., அன்பழகன், ஆதிதிராவிடர் நல அலுவலர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட அதிகாரிகள், சமூகநீதி, மனிதஉரிமை பிரிவு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள், சமூகநீதி விடுதி காவலர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர். ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களிடையே தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது. விழாவில் புனிதம் கலைக்குழுவினர் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகளாக கரகாட்டம், ஒயிலாட்டம், மாடாட்டம், காவடியாட்டம் நடத்தினர். அரசு வழக்கறிஞர்கள் அழகன், சந்திரன், போலீஸ் எஸ்.ஐ., கிருஷ்ணபாண்டி, தாட்கோ மேலாளர் பாலசுப்ரமணியன், பள்ளித் தலைமை ஆசிரியர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர். அலுவலக கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ