உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்கலையில் உண்ணாவிரதம்

சம்பளம் வழங்க வலியுறுத்தி பல்கலையில் உண்ணாவிரதம்

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பெண்ணிய கல்வி மையம் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்காததை கண்டித்து அவர்கள் நேற்று உண்ணாவிரதம் இருந்தனர்.இப்பல்கலையில் யு.ஜி.சி., திட்டத்தில் இம்மையம் 2009ல் துவங்கப்பட்டது. 2013ல் பல்கலை சார்பில் பணி நியமனங்கள் நடந்தன. தற்போது இயக்குநர், பேராசிரியர், அலுவலர்கள் பணியில் உள்ளனர். இவர்களுக்கு யு.ஜி.சி., மானியம் மூலம் சம்பளம் வழங்கப்படுகிறது.இந்நிலையில் 'பதிவாளர் பெயரில், மைய இயக்குநர் முன்பணம் பெற்று சம்பளம் வழங்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை பின்பற்ற வேண்டும்' என நிதி அலுவலர் உத்தரவிட்டார். இதனால் ஆடிட் அப்ஜெக் ஷன் ஏற்படுவதாக கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் யு.ஜி.சி., மானியம் வழங்கப்பட்டும் 6 மாதங்களாக சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்ளப்பட்டது.இயக்குநர் ரேணுகா தேவி கூறுகையில், 2023 - 24 நிதியாண்டுக்கு யு.ஜி.சி., மானியம் வழங்கப்பட்டுள்ளது. சம்பளம் வழங்க வேண்டியது பல்கலை பொறுப்பு. ஆனால் 2024 ஜூலை முதல் தற்போது வரை சம்பளம் வழங்கவில்லை. நிதி அலுவலர் ஆனந்தன் யு.ஜி.சி., விதிமீறி தன்னிச்சையாக செயல்படுகிறார். பல்கலை கணக்கில் இருந்து எங்களின் நிலுவை சம்பளத்தை உடன் வழங்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

raja
ஜன 29, 2025 18:16

விடியல் வரும் என்று ஒட்டு போட்டு திவால் நிலமைக்கு தள்ளி விட்டதில் மாடல் அரசு காரணம் அல்ல...கேவலம் பணத்துக்கு விலைபோன மாக்களே...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை