உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உசிலம்பட்டியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

உசிலம்பட்டியில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

உசிலம்பட்டி,: உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் (ஆர்.டி.ஓ.,) 30 ஆண்டுகளுக்குப்பின் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உட்கர்ஷ்குமார் உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., அலுவலகம் சுதந்திரத்திற்கு முன் 1910 ல் துவங்கப்பட்டது. ஒருங்கிணை ந்த மதுரையாக இருந்த போது திண்டுக்கல், தேனி மாவட்டங்களை உள்ளடக்கிய அலுவலகமாக இந்த அலுவலகம் இயங்கியது. ஐ.சி.எஸ்., படித்த பேர்பிரைன், லாக்லின், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பண்டா, ஸ்ரீபதி, ஷீலாபிரியா, சவுபே, ஹேமந்த்குமார் சின்கா ஆகியோர் உதவி கலெக்டர்களாக பணிபுரிந்துள்ளனர். ஏப். 1994 முதல் செப். 1995 வரை ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாபுலால்மீனா உதவி ஆட்சியராக பணியாற்றினார். அதன் பின் வருவாய் கோட்டாட்சியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். சமீபத்தில் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றிய சண்முக வடிவேல் பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக 30 ஆண்டுகளுக்குப் பின் ஐ.ஏ.எஸ்., பயிற்சி முடித்துள்ள உட்கர்ஷ் குமார், உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றார். தாசில்தார்கள் உசிலம்பட்டி பாலகிருஷ்ணன், பேரையூர் செல்லப்பாண்டி, டி.எஸ்.பி., சந்திரசேகரன், இன்ஸ்பெக்டர் ஆனந்த் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ