உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குலைநோய் கட்டுப்படுத்த யோசனை

குலைநோய் கட்டுப்படுத்த யோசனை

பேரையூர்: நெற்பயிரில் குலைநோயை கட்டுப்படுத்த சேடப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி யோசனை தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: பேரையூர் தாலுகாவில் மேகமூட்டமாக இருப்பதால் நெல் வயல்களில் குலைநோய் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே விவசாயிகள் குலைநோய் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அறிந்து பின்பற்ற வேண்டும்.பயிரின் அனைத்து பகுதிகளும் பூசனத்தால் தாக்கப்பட்டிருக்கும். குலைநோயை கட்டுப்படுத்த வயல், வரப்புகளில் களைகளை அகற்ற வேண்டும். சூடோமோனாஸ் துகள் கலவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் 400 மி.லி. தண்ணீரில் கலந்து விதைப்பதால் குலை நோய் தாக்குதல் குறைகிறது. நெல்லில் குறைந்து தாக்குதலாக 2 முதல் 5 சதவீதம் நோய் தீவிரம் இருந்தால் கார்பன்டசீம் 1.0 கிராம்/ லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.நோய் தாக்குதல் காணப்பட்டால் தழைச்சத்து உரம் அளித்தலை தாமதமாக செய்ய வேண்டும். வயலில் நோய் தோன்றும்போது செடிகளுக்கு எக்டேருக்கு எடிபென்பாஸ் 500 மி.லி அல்லது மேன்கோசெப் 1 கிலோ அல்லது கிட்டாசின் 250 கிராம் அல்லது டிரைசைக்ளோசோல் 400 கிராம் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ