உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

 கடலைப்பருப்புக்கு இறக்குமதி வரி விதிக்க வேண்டும்

மதுரை: 'மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலையைக் காட்டிலும் கடலைப் பருப்பின் விலை குறைந்து உள்ளதால் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 30 சதவீத வரி விதிக்க வேண்டும்' என தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். சங்கத் தலைவர் வேல்சங்கர், கவுரவ செயலாளர் சாய் சுப்ரமணியம், கவுரவ ஆலோசகர் ஜெயப்பிர காசம் கூறியதாவது: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கொண்டைக்கடலை அதிகளவில் உற்பத்தியாகிறது. கொண்டைக் கடலையை உடைத்தால் கடலைப் பருப்பு, வறுத்தால் பொரி கடலை, அரைத்தால் கடலைமாவு என பல்வேறு வடிவங்களில் நுகர்வோர் பயன்படுத்துகின்றனர். 100 கிலோ கடலை பருப்புக்கு மத்திய அரசு நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலை ரூ. 5800. உள்நாட்டு உற்பத்தி அதிகரித்ததால் ரூ.5400க்கு குறைவான அளவே மார்க்கெட்டில் விலைபோகிறது. கனடா, ஆஸ்திரேலியாவில் இருந்து கடலைப் பருப்பு தொடர்ந்து இறக்குமதி யாகிறது. அடுத்து மார்ச்சில் உள்நாட்டு அறுவடை தொடங்கி விட்டால் விவசாயிகளுக்கு சரியான விலை கிடைக்காது. அதேநேரம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் கடலைபருப்புக்கு 30 சதவீத வரி விதித்தால் உள்நாட்டு விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள். விலைவாசி குறைவ தற்கோ, அதிகரிப்பதற்கோ வாய்ப்பில்லை என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ