உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஊராட்சிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு

ஊராட்சிகளில் திறந்தவெளி கழிப்பிடங்கள் அதிகரிப்பு

பேரையூர் : பேரையூர் தாலுகாவில் 72 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 200க்கும் மேற்பட்ட உட்கடை கிராமங்களில் உள்ள ஊருணி கரைகள், கண்மாய் கரைகள், கருவேலம் வளர்ந்துள்ள நத்தம் புறம்போக்கு நிலங்கள் என ஒதுக்குப்புறங்களை மக்கள் திறந்தவெளி கழிப்பிடங்களாக பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. காரணம் செயல்படாத பராமரிப்பற்ற சுகாதார வளாகங்கள் தான். ஊராட்சி நிர்வாகங்கள் சுகாதார வளாகங்களை பராமரிக்க எந்த முயற்சியும் எடுப்பதில்லை. கழிப்பறையின் கதவுகள், கோப்பைகள் சேதம் அடைந்து விட்டன. மத்திய அரசின் துாய்மை இந்தியா திட்டம் கேள்விக்குறியாகிறது. மகளிர் சுய உதவிக்குழு மூலம் பராமரித்தால் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் ஊராட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை