உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜி.எஸ்.டி.,யில் 2 அடுக்கு வரிவிகிதம் தொழில் நிறுவனங்கள் பாராட்டு

ஜி.எஸ்.டி.,யில் 2 அடுக்கு வரிவிகிதம் தொழில் நிறுவனங்கள் பாராட்டு

மதுரை: ஜி.எஸ்.டி., வரிச் சட்டத்தில் சீரமைப்பாக பிரதமர் மோடி அறிவித்துள்ள இரண்டடுக்கு வரிவிகித முறைக்கு மதுரை அக்ரி மற்றும் அனைத்து தொழில் வர்த்தக சங்கம் வரவேற்றுள்ளது. தலைவர் ரத்தினவேலு கூறியதாவது: ஆரம்பத்தில் இருந்தே தொழில் வணிகத்துறையினர் ஜி.எஸ்.டி.,யின் 28 சதவீத வரியை எதிர்த்து வந்தனர். ஜி.எஸ்.டி.,யின் இரண்டாவது தலைமுறை சீரமைப்பில் 12 சதவீதம், 28 சதவீத வரி வீதம் ரத்து செய்யப்பட்டு 5 சதவீதம், 18 சதவீதம் என இரண்டடுக்கு வரிவீதம் மட்டும் அக்., நவ., முதல் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். ரத்து செய்யப்பட உள்ள 12 சதவீத வரி விதிப்பு பொருட்களில் 99 சதவீத அளவிற்கானவை 5 சதவீத வரிப் பட்டியலுக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களுக்கான 28 சதவீத வரியை 40 சதவீதத்திற்கு மாற்றப்படும் எனவும் மீதம் உள்ள பொருட்களை 18 சதவீத பட்டியலுக்கு மாற்றப்படும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார். தொழில் துறையினருக்கான தீபாவளிப் பரிசாக ஜி.எஸ்.டி.,யில் செய்யப்பட உள்ள முக்கியத்துவம் வாய்ந்த இந்த சீரமைப்பின் மூலம் அத்தியாவசியப் பொருட்களான உணவு, மருந்து, வீட்டு உபயோகப் பொருட்கள், கல்விக்கான பொருட்கள், வேளாண்மை உபகரணங்கள், சிமென்ட், வாகனங்கள் விலை கணிசமாக குறையும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி