உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / குப்பையுடன் வரவேற்கும் குழந்தையின்மை சிகிச்சை மையம்

குப்பையுடன் வரவேற்கும் குழந்தையின்மை சிகிச்சை மையம்

மதுரை: மதுரை அரசு மருத்துவமனை பின்புற வாசல் வழியாக குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையத்திற்கு (வார்டு 52) செல்லும் வழியில் குப்பையும் கட்டட இடிபாடும் குவிந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது.இப்பாதை வழியாக கண் வார்டு மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்சை மையம் செல்லலாம். சிறப்பு மையம் முன்புறம் கட்டட இடிபாடுகளை குவித்து வைத்துள்ளனர். அதையொட்டியும் பின்புறமும் புதர் மண்டி கிடக்கிறது. திடீரென நாய்கள் படை பின்பக்கத்தில் இருந்து கண் வார்டை நோக்கி ஒன்றையொன்று துரத்தி ஓடுவதால் நோயாளிகள் பயந்து ஓடுகின்றனர். புதர் மண்டிய பகுதி பாம்புகளின் புகலிடமாக மாறியுள்ளது. கண் சிகிச்சைக்கு வருபவர்கள் பள்ளம் மேடான பகுதியில் நடந்து செல்லும் போது தடுமாறுகின்றனர்.சிகிச்சை மட்டும் தரமாக இருந்தால் போதாது. வார்டுக்கு செல்லும் பாதையும் சுகாதாரமாக இருக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்