மேலும் செய்திகள்
ஓய்வூதியர் தின கருத்தரங்கம்
19-Dec-2024
மதுரை: மதுரையில் அரசு போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்கள் எச்.எம்.எஸ்.,சங்க மதுரை கிளை சார்பில்உலக ஓய்வூதியர் தினவிழா தலைவர் அங்குசாமி தலைமையில் நடந்தது.நிர்வாகிகள் ஒச்சாத்தேவன், சவுந்திரராஜ், ரவி முன்னிலை வகித்தனர். செயலாளர் ஷாஜஹான் தீர்மானங்களை விளக்கினார்.பணப்பலன்களை பெறாமல் உயிர்நீத்த ஓய்வூதியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. டிச.27ல் 15வது ஓய்வூதிய பேச்சுவார்த்தை துவக்கப்படும் என போக்குவரத்து செயலர் பணிந்திரரெட்டி கூறியது வரவேற்கதக்கது. ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் மத்திய, மாநில பேரவை சங்கங்கள், ஓய்வூதியர் நலஅமைப்பு பிரதிநிதிகளை உள்ளடக்கி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழகத்தில் நிர்வாக சீர்திருத்தம் செய்து, ஐ.ஏ.எஸ்., அதிகாரியை நியமிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
19-Dec-2024