உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொம்மன்பட்டியில் நாடக மேடை அமைக்க வலியுறுத்தல்

பொம்மன்பட்டியில் நாடக மேடை அமைக்க வலியுறுத்தல்

சோழவந்தான்; சோழவந்தான் அருகே பொம்மன்பட்டியில் நாடக மேடை அமைக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர். அப்பகுதி ரவி கூறியதாவது: இக்கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். காளியம்மன் கோயில், சர்ச் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி மாதம் காளியம்மன் கோயில் விழா, டிசம்பரில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படும். இவ்விழா நாட்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், நாடகங்கள் நடைபெறும். மற்ற ஊர்களில் இருப்பதைப் போல இங்கு நாடக மேடை இல்லாததால் ரோட்டின் குறுக்கே மேடை அமைத்து நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதித்து மக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாடக மேடை அமைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை