பாதாளச்சாக்கடை பணிகள் ஆய்வு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. அப்பணிகளை மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, உதவிப் பொறியாளர் ராமசுப்பிரமணியன் ஆய்வு செய்தனர்.சுவிதா கூறுகையில், ''93, 100வது வார்டுகளில் பணிகள் நடக்கிறது. திருப்பரங்குன்றத்தில் கீழத்தெரு, நடுச்சந்து, படப்படித் தெரு, பாவேந்தர் பாரதிதாசன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கிரிவலப் பாதையில் இணைப்பு பணிக்காக ஆய்வு செய்யப்பட்டது. கீழத்தெரு நடுச்சந்து, கீழத்தெரு பகுதிகளில் பணிகளைத் துவக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.