பந்தல் சாகுபடியில் ஆர்வம்
பேரையூர்: பேரையூர் பகுதியில் கடந்த வாரம் தொடர் மழை பெய்தது. விவசாய நிலங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் காய்கறிகள் விளைய வைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வீடுகளில் பந்தல் அமைத்து தேவையான பீர்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், அவரைக்காய் உள்ளிட்ட கொடி வகைகளுடன் கூடிய செடிகளை விதைத்து வருகின்றனர். இதற்காக காய்கறி விதைகளை விலைக்கு வாங்கி பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.