உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மாணவர்களுக்கு சர்வதேச விருது

மாணவர்களுக்கு சர்வதேச விருது

சோழவந்தான் : சோழவந்தான் அருகே நகரி கல்வி குழும மாணவர்கள் தருண், குண வர்ஷினி சர்வதேச தரம் வாய்ந்த மாநாடுகளில் விருதுகளை வென்று சாதித்துள்ளனர். புனே பிளேம் பல்கலையில் நடந்த 'ஆக்ஸ்போர்டு எம். யு.என்' இந்தியா 2025 மாநாட்டில் சவாலான குழு விவாதங்களில் மாணவர் தருண் 'அவுட்ஸ்டாண்டிங் டெலிகேட்' விருது பெற்றார். 'ஆக்ஸ்போர்டு' பல்கலையின் கல்விச்சிறப்பு, 'ஹார்வர்டு' பல்கலையின் உச்சி மாநாட்டை ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், சிறப்பாக செயல்பட்டவர்கள் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டில் நடைபெறும் உலகளாவிய மாநாட்டில் பங்கேற்க உதவித்தொகை வழங்கப்படும். இதேபோல் இந்தியாவில் முதன்முறையாக நடந்த 'எச்.எஸ்.ஐ.எஸ் 2025' மாநாட்டில் மாணவி குண வர்ஷினி 'சோசியல் கேட்டலிஸ்ட்' விருது பெற்றார். இந்த மாநாட்டில் ஹார்வர்ட் பல்கலை பேராசிரியர்கள் வழிகாட்டிய கொள்கை ஆய்வகங்கள், புதுமைச் சவால்கள், மாற்றுத் தலைமை பயிற்சிகள் இடம்பெற்றன. சிறந்த அணிகள் அமெரிக்காவில் நடைபெறும் 'ஹார்வர்டு' முதன்மை மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு பெறுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ