உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பன்னாட்டு கருத்தரங்கு

பன்னாட்டு கருத்தரங்கு

மதுரை: மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் தமிழர் படைப்பும் ஆளுமையும் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. முத்தரசி கலை இலக்கியப் பண்பாட்டுத் தமிழ் ஆய்விதழ், கும்பகோணம் மருதம் கலை இலக்கிய ஆய்வு மையம், விருதுநகர் அஞ்சிறைத்தும்பி இலக்கிய வட்டம் இணைந்து நடத்தின. ஆய்வறிஞர் சோமசுந்தரி வரவேற்றார். இயக்குநர் அவ்வை அருள் தலைமை வகித்தார். விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரி உதவிப்பேராசிரியர்கள் தங்கமாரி, பெரியசாமிராசா, ஆய்வு மைய நிறுவனர் கணேசமூர்த்தி, இலக்கிய வட்ட செயலாளர் வினோத், எஸ்.எப்.ஆர். கல்லுாரி இணைப்பேராசிரியைகள் பொன்னி, பத்மபிரியா பேசினர்.உதவிப் பேராசிரியர் பெரியசாமிராஜா தமிழ், தமிழர் - படைப்பும் ஆளுமையும் என்ற நுாலை வெளியிட கவிஞர் மூரா பெற்றுக்கொண்டார். ஆய்வு வளமையர் ஜான்சிராணி நன்றி கூறினார். தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் சுசிலா கட்டுரையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை