உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /   சர்வதேச  கருத்தரங்கம்

  சர்வதேச  கருத்தரங்கம்

மதுரை: மதுரை பாத்திமா கல்லுாரியில், 'தலைமுறை சுகாதார பராமரிப்புக்கான நிலையான நானோ மற்றும் ஏ.ஐ., இணைத்த புதுமைகள்' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. முதுகலை ஆராய்ச்சி வேதியியல் துறைத் தலைவர் சுகுமாரி வரவேற்றார். துணை முதல்வர் அருள்மேரி முன்னிலை வகித்தார். செயலாளர் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தார். முதல் அமர்வில் ஐதராபாத் அப்போலோ மருத்துவமனை கல்வி, ஆராய்ச்சி அறக்கட்டளை விஞ்ஞானி கார்த்திக்குமார், நானோ தொழில்நுட்பங்கள் குறித்து பேசினார். இரண்டாம் அமர்வில் ஸ்லோவாக் குடியரசில் உள்ள கோமேனியஸ் பல்கலை விஞ்ஞானி பாபியோலா அன்னஸ், தைவான் தேசிய செங் குங் பல்கலை விஞ்ஞானி தர்மராஜ் வைரப்பெருமாள், உயிரியல் அமைப்புகளுக்கும், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நுட்பங்களை பயன்படுத்தி, நானோ சார்ந்த பொருட்களுக்கும் இடையிலான தொடர்பில் கவனம் செலுத்தியதை விளக்கினர். உதவிப் பேராசிரியர்கள் அனன்சியா கிரேஸ், ராஜேஸ்வரி நன்றி கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை