வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சாயம் வெளுத்து விட்டதா ?/ அப்போ என்ன கலர் மீதி இருக்கு என்று பார்த்து சொல்லு
அவனியாபுரம் : 'தமிழக மக்களிடம் தி.மு.க.,வின் சாயம் வெளுத்து விட்டது' என பா.ஜ., மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தெரிவித்தார். மதுரையில் அவர் கூறியதாவது: ஓட்டு வங்கிக்காக தி.மு.க., காங்., கட்சியினர் அரசியல் செய்கின்றனர்.வக்ப் வாரிய சட்ட திருத்தம் ஏழை மக்களுக்கு உதவியாக இருக்கும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வக்ப் வாரியம் பெயரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. திருச்சி அருகே ஒரு முழு கிராமமும் வக்ப் வாரிய சொத்து என அறிவிக்கப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.வட இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஓட்டு வங்கிக்காக தி.மு.க., வினர் குறை கூறுகின்றனர். கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதல்வர் அரசியல் செய்கிறார். மக்களிடம் தி.மு.க., வின் சாயம் வெளுத்து விட்டது. தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று, இரண்டை மட்டும் நிறைவேற்றிவிட்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. மக்களை திசை திருப்புவதற்காக மொழி பிரச்னை போன்றவற்றை கிளப்புகிறார்கள்.தி.மு.க., எம்.பி., ராஜா ஹிந்துக்களின் நம்பிக்கைகள் குறித்து பேசி அவர்களின் உணர்வுகளை காயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது.அண்ணாமலை நேர்மையான சிப்பாய். கட்சி முடிவு எடுக்கும்வரை அவர்தான் தலைவர். கட்சிக்குள் பிரச்னை ஏற்படுவதற்கு சில விஷமிகள் இந்த பிரச்னையை கிளப்புகிறார்கள் என்றார்.
சாயம் வெளுத்து விட்டதா ?/ அப்போ என்ன கலர் மீதி இருக்கு என்று பார்த்து சொல்லு