உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பிளாட்டுகளில் வீணாகும் பாசன நீர்

பிளாட்டுகளில் வீணாகும் பாசன நீர்

மேலுார்: மேலுார் ஒருபோக பகுதியில் கால்வாய்களை பராமரிக்காததால் பாசன நீர் பிளாட் மற்றும் வீடுகளை சுற்றி தேங்குவதாக நீர்வளத் துறையினர் மீது புகார் எழுந்துள்ளது. கள்ளந்திரி - குறிச்சிப்பட்டி வரை பெரியாறு ஒருபோக பாசன பகுதிக்கு 12 வது பிரதான கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது. செப்.18ல் ஒரு போகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் நொண்டி கோவில்பட்டியில் இருந்து கொட்டகுடிக்கு செல்லும் 6 வது கால்வாயும், மேலுாரில் இருந்து வண்ணாம்பாறைபட்டிக்கு 6 பி கால்வாயும் செல்கிறது. இதில் மலம்பட்டியில் பிரியும் 2 கால்வாய்கள் மூலம் மலம்பட்டி, பட்டாளம் கண்மாய்களுக்கு செல்கிறது. இவற்றை நீர்வளத்துறையினர் பராமரிக்காததால், திருமால் நகரில் உள்ள பிளாட்டுக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். அப்பகுதி மக்கள் கூறியதாவது: பாசன நீர் பிளாட் மற்றும் வீடுகளை சுற்றி தேங்குவதால் பாம்பு, தேள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. வீட்டைவிட்டு வெளியே வரஇயலவில்லை. எங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது. தேங்கிய தண்ணீரில் கொசு உற்பத்தியாகி குழந்தைகள், முதியவர்கள் தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். வீட்டின் சுவர்கள் வலுவிழக்கும் அபாயம் உள்ளது. நீர்வளத்துறை அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை. மாவட்ட நிர்வாகம் பிளாட்டுக்களில் தண்ணீர் தேங்காமல் கால்வாயில் தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை