உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுவரை தொட்டாலே சும்மா உதிருதில்ல

சுவரை தொட்டாலே சும்மா உதிருதில்ல

மேலுார் : கோயில்பட்டியில் சமையலறை கட்டி முடித்து ஓராண்டுகூட முடியாத நிலையில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் ் மாணவர்கள், பணியாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.நா. கோயில்பட்டியில் செயல்படும் துவக்க பள்ளியில் 90 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியின் முன் பகுதியில் ஊரக வேலை உறுதி திட்டத்தில் 10 மாதங்களுக்கு முன் ரூ.7.43 லட்சத்தில் சமையல் கூடம் கட்டப்பட்டது. ஒரு அறையில் மாணவர்களின் காலை உணவு, மற்றொரு அறையில் மதிய உணவு, பொருள்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சமையற் கூட சுவரின் சிமென்ட் பூச்சுகளை கையால் தொட்டாலே உதிர்கிறது. ஜன்னல் பகுதியின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்து விட்டதால் கதவுகள் ஆடுகின்றன. அதனால் சமையலறைக்குள் மாணவர்கள், பணியாளர்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர். இதுவரை மின் இணைப்பும் கொடுக்கவில்லை.மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு மராமத்து பார்த்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பது பெற்றோரின் எதிர்பார்ப்பு.பி.டி.ஓ., சுந்தரசாமி கூறுகையில், உடனே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை