மேலும் செய்திகள்
பைக் மோதி மாடு பலி
16-Sep-2024
மதுரை:மதுரை, தெப்பக்குளம் அருகே சின்ன அனுப்பானடியைச் சேர்ந்தவர் முத்துராமன். இவரது மகன் வீரசரவணன், 28. பாண்டிக்கோவில் அருகே உள்ள டைடல் பார்க்கில் ஐ.டி., நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். நேற்று காலை வழக்கம்போல் டூ -- வீலரில் பணிக்கு சென்றார். சிந்தாமணி ரிங் ரோடு அரிசி ஆலை அருகே சென்றபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, அவர் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே வீரசரவணன் உடல் துண்டாகி உயிரிழந்தார். லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
16-Sep-2024