உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜாமின் கிடைத்தும் வெளியே வரமுடியாத கைதிகள் உத்தரவாதத்துக்கு ஆள் தேடும் பரிதாபம்

ஜாமின் கிடைத்தும் வெளியே வரமுடியாத கைதிகள் உத்தரவாதத்துக்கு ஆள் தேடும் பரிதாபம்

மதுரை: தமிழக சிறைகளில் கைதிகள் சிலருக்கு ஜாமின் கிடைத்தாலும் அதற்குரிய உத்தரவாதம் கொடுக்க குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ முன்வராததால் தொடர்ந்து 'சிறை பறவை'யாகவே இருந்து வருகின்றனர்.வேலுார் சிறையில் பெண் கைதிக்கு ஜாமின் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும் 300 நாட்களுக்கும் மேலாக அவர் விடுவிக்கப்படவில்லை. இதுதொடர்பான வழக்கில் 'ஜாமின் கிடைத்த பின்னரும் ஒருவர் சிறை உள்ளேயே அடைத்து வைக்கப்பட்டால் அது மனித உரிமை மீறல்' என நீதிமன்றம் கண்டித்தது. பெண் கைதி போன்று பல கைதிகள் ஜாமின் கிடைத்தும் வெளியே வரமுடியாத நிலையில் உள்ளனர். 'பெரும்பாலும் கைதிகளின் தரப்பில் உத்தரவாதம் கொடுக்க முன்வராதது, வேறு வழக்குகளில் ஜாமின் கிடைக்காதது போன்ற காரணங்களால்தான் வெளியே வரமுடிவதில்லை' என்கின்றனர் சிறை அதிகாரிகள்.அவர்கள் கூறியதாவது: நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டு குறிப்பிட்ட தொகைக்கு உத்தரவாதம் அளிக்க அறிவுறுத்தும். அந்த தொகைக்கான அசையா சொத்துகள் உள்ளிட்ட ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து 'பெயில் பாண்டு' பெற்று சிறை நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். அதன்பிறகே கைதியை வெளியே அனுப்ப முடியும். சில வழக்குகளில் கைதி மீது குடும்பத்தினரோ, உறவினர்களோ, நண்பர்களோ வெறுப்படைந்து உத்தரவாதம் கொடுக்க முன்வரமாட்டார்கள் அல்லது உத்தரவாதம் கொடுக்க முடியாமல் அசையா சொத்தின் மதிப்பு குறைவாக இருக்கும். இதுபோன்ற காரணங்களால் மதுரை சிறையில் 4 கைதிகள் உட்பட தமிழகம் முழுவதும் 10க்கும் மேற்பட்ட கைதிகள் ஜாமின் கிடைத்தும் வெளியே வரமுடியாமல் உள்ளனர் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை