உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த மாநாடு

 ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த மாநாடு

மதுரை: ஜாக்டோ ஜியோ சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது. 2003 ஏப்.1க்கு பின் அரசு பணியில் சேர்ந்தோருக்கு பங்களிப்பு ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஜன.6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி ஆயத்த மாநாடு மதுரையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரபோஸ், பாண்டி, நவநீதகிருஷ்ணன், பொற்செல்வன், பீட்டர் ஆரோக்கியராஜ், தமிழ் தலைமை வகித்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மயில் பேசினார். உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணமாகக்கூறி 2010 ஆக.23 க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து (தகுதித் தேர்விலிருந்து விலக்களித்து) பாதுகாக்க, தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். இடைநிலை, முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். அரசுத்துறைகளில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும். தவறினால் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என வலியுறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை