உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்: ஏப்.23 வரை தடை நீட்டிப்பு

ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்: ஏப்.23 வரை தடை நீட்டிப்பு

மதுரை; ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தத்திற்கு எதிராக தாக்கலான வழக்கில், எவ்வித வேலைநிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடையை நீட்டித்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.திருச்செந்துார் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஏற்கனவே தாக்கல் செய்த பொதுநல மனு: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை திரும்பப் பெற வேண்டும்; பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் வேலை நிறுத்தம், சாலை மறியலில் ஈடுபட உள்ளனர்.வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என ஏற்கனவே உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளன. அதை மீறுவது சட்டவிரோதம். வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.பிப்.,24 ல் விசாரணையின்போது அரசு தரப்பு,'ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளிடம் 4 அமைச்சர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடக்கிறது. மார்ச் 24 வரை அவகாசம் தேவை,' என தெரிவித்தது.இரு நீதிபதிகள் அமர்வு: ஜாக்டோ-ஜியோ சார்பில் மார்ச் 24 வரை எவ்வித வேலைநிறுத்தத்திலும் ஈடுபடக்கூடாது என இடைக்கால தடை விதித்தது.நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு நேற்று விசாரித்தது.அரசு தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.நீதிபதிகள்: வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு ஏப்.,23 வரை நீட்டிக்கப்படுகிறது.இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ