உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கையை துண்டித்த குடும்பத்திற்கு சிறை

கையை துண்டித்த குடும்பத்திற்கு சிறை

மேலுார்: மேலுார் தெற்குதெரு கார்த்திக் 30, பக்கத்து வீட்டுக்காரர் ராமன். இரு குடும்பத்தினர் இடையே இடப்பிரச்னை இருந்தது. 2021 மார்ச் 23 இரவில் ராமன், அவரது குடும்பத்தினர் கார்த்திக் வீட்டிற்குள் புகுந்து வெட்டியதில் தந்தை கணேசனின் இடதுகை துண்டானது. இவ்வழக்கு மேலுார் உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. அரசு வழக்கறிஞர் சபாபதி ஆஜரானார். ராமனுக்கு 2 ஆண்டு, மனைவிக்கு ஓராண்டு, மகன் அஜீத்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாமுண்டீஸ்வரி பிரபா தீர்ப்பளித்தார். இந்நீதிமன்றத்தில் முதன் முறையாக வழங்கப்பட்ட சிறை தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ