உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பாண்டவர் மலையில் சமண துறவிகள்

பாண்டவர் மலையில் சமண துறவிகள்

மேலுார்: ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி, முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை வேண்டி கடந்த 2 ஆண்டுகளாக நடைபயணமாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். நேற்று கீழவளவு பஞ்ச பாண்டவர் மலைக்கு வந்த துறவிகளை சமூக ஆர்வலர் செந்தில்குமார் தலைமையில் கிராம மக்கள் வரவேற்றனர். பிறகு மக்கள் மத்தியில் பேசிய துறவிகள், ''மது, மாமிசம் பயன்படுத்தக் கூடாது. அமைதி, அஹிம்சை, அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாமை, கருணை, எளிமை, சமநிலை, சுயசுத்தி, பதற்றப்படாமல் இருக்க செய்ய வேண்டிய தியானம் குறித்து எடுத்துரைத்தனர். அதன்பின் பஞ்ச பாண்டவர் மலையில் தங்கியவர்கள் இன்று (நவ.10) திருவண்ணாமலைக்கு செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை