உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரையில் ஜெயலலிதா நினைவு தினம்

மதுரையில் ஜெயலலிதா நினைவு தினம்

மதுரை: மதுரையில் அ.தி.மு.க., சார்பில் மறைந்த முதல்வர்ஜெயலலிதாவின் 8ம் ஆண்டு நினைவு நாளையொட்டி மவுன ஊர்வலம் நடந்தது.நகர் செயலாளர் செல்லுார் ராஜூ தலைமையில் ஜான்சிராணி பூங்காவில் இருந்து ஊர்வலமாக கிளம்பினர். வடக்கு - மேலமாசி வீதி சந்திப்பு வரை சென்றனர். இதில் மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.உசிலம்பட்டி: நகர் செயலாளர் பூமாராஜா, அமைப்பு செயலாளர் மகேந்திரன், மாநில ஜெ., பேரவை துணைச் செயலாளர் துரைதனராஜ், நகராட்சித் தலைவர் சகுந்தலா, மாவட்ட கவுன்சிலர் சுதாகரன் ஜெ., படத்திற்கு அஞ்சலி செலுத்தினர். மதுரை ரோட்டில் ஓ.பி.எஸ்., அணி சார்பில்நடந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ., அய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியம்மாள், நிர்வாகிகள் பிரபு, சசிகுமார், ஜான்சன் பங்கேற்றனர்.திருப்பரங்குன்றம்: மதுரை கிழக்கு மாவட்டஅ.தி.மு.க., சார்பில் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா அன்னதானம் வழங்கினார். செல்வகுமார், மோகன்தாஸ், பாலா, பாலமுருகன் பங்கேற்றனர்.வாடிப்பட்டி: நகர் செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். பேரவை செயலாளர் தனசேகரன், எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் முத்துகண்ணன், ஒன்றிய அவைத் தலைவர் ராமசாமி, ரவி முன்னிலை வகித்தனர். நகர் துணைச்செயலாளர் சந்தனத்துரை, பேரவை மாநில துணைச் செயலாளர் ராஜேஷ்கண்ணா அஞ்சலி செலுத்தினர். திருமங்கலம்: மீனாட்சி அம்மன் கோயிலில் ஓ.பி.எஸ்., ஆதரவு எம்.எல்.ஏ., அய்யப்பன் தலைமையில் அன்னதானம் நடந்தது. மாநில இளைஞரணி செயலாளர் ராஜ்மோகன், நகர் செயலாளர் ராஜாமணி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை